Saturday, May 6, 2017

அன்பின் வெளிப்பாடுகள்

 எனது நினைவரிந்து 23 ஆண்டுகளாக உள்ள எனது குருவின் தொடர்பு, அதற்கு முன் எத்தனை கோடி ஆண்டுகளாக இருந்து வருகிறது என்பதை நான் அறியேன். அத்தகய அறியாமையும் ஒரு விதத்தில் நன்றே! ஏனெனில் இவ்வன்பு இந்த நாளில் தான் தொடங்கியது என்றால் அதற்கு காலம் என்ற ஒரு எல்லை அமைந்துவிடுகிறது. இக்கால வரையற்ற அன்பை எப்படித்தான் வர்ணனை செய்வது? அது யாராலும் முடியாது! அப்படி செய்ய முடிந்தாலும் அன்பிற்கு ஒரு முற்றுகை அமைந்துவிடும். இவ்வெல்லை அற்ற அன்பை சொல்லாலும் வர்ணனை செய்ய முடியாது, காலத்லும் அடக்க முடியாது மற்றும் எடையை கொண்டும் அளவிட முடியாது. ஏனெனில் அன்பு நமது ஐம்புலன்களால் அளவிட முடியாதது. அன்பின் வெளிப்பாட்டை மற்ருமே உணர முடியும். ஆனால் அன்பின் வெளிப்பாடு தூய அன்பிற்கு நிகர் அற்றது. மனிதன் ஆதி காலம் தொட்டு அன்பை வெளிப்பாடு செய்ய முடியாமல் திண்டாடி, தவித்து பலமுறை தோற்றத்தை அறியாதார் யார்? மேலும் வெளிப்பாடு என்ற வலையில் விழுந்ததே காரணம் பல சண்டைகளுக்கு! மனைவி ஒருவனை பார்க்கிறாள், அது காமத்தின் வெளிப்பாடாக இருக்குமோ என கணவன் மனது துடிக்கிறது. நண்பன் தன்னைவிட அதிகமாக சம்பாதிபதை கண்டு ஏற்படுகிறது பொறாமை என்ற வெளிப்பாடு. சரியான முறையில் எல்லா செயல்களையும் செய்யவேண்டும் என்ற ஆசையினால் ஏற்படுவது கோபம் என்ற வெளிப்பாடு. தனது குடும்பம் பல தலைமுறைகளுக்கு அமர்ந்து சாப்பிடவேண்டும் என்ற ஆசயினால் ஏற்படுவது பேராசை என்ற வெளிப்பாடு. தான் மட்டுமே எல்லோரை காட்டிலும் உயர்ந்தவன் என்ற எண்ணத்தால் ஏற்படும் வெளிப்பாடு அவனது அகந்தை ஆகும். இப்படி பல பல பெயர்களால் ஏற்படும் எல்லா வெளிப்பாட்டிற்கும் அடிப்படை காரணம் ஒன்றே, அது அன்புதான்!!!

1 comment:

D Sukumaran said...

Ramu, True love is so wonderful. It is priceless. But again, everything is in one's mind, and the way he perceives events and actions of others with regards to his self.