Saturday, May 6, 2017

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மன்னர்களின் ஆன்மீக பயணம்

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மன்னர்களுக்கும் ஆன்மிகத்திற்க்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழலாம். அதை விளக்கவே மூணுள்லேன் இக்கட்டுரையில்.

தமிழ் வளர்த்தனர் என்கின்றனர், ஆனால் அவ்விதம் வளர்க்க பெற்ற தமிழ் மீது ஏற்பட்ட அன்பின் அடிப்படை காரணம் என்னவென்று யாரேனும் சிந்தித்ததுண்டோ? இந்நாளிலும் மக்கள் தமிழ் பயில்கின்றனர். ஆனால் சங்கம் வைத்து தமிழ் வளர்க்கும் அளவில் எல்லையற்ற தமிழ் பற்று உடையவர்கள் மிகச்சிலரே. வெறும் தமிழ் படிப்ததினால் ஏற்பட்டுவிடது தமிழ் பற்று. அதற்கு ஆன்மீகம் என்ற அடிப்படை ஆதாரம் வேண்டும். இங்கு ஆன்மீகம் என்பது எவ்வித மதத்தையும் குறிக்கவில்லை. எனது கருத்தின்படி மதம் என்பதை ஒரு வாழைப்பழ தோலொடு ஒப்பிட்டால் ஆன்மீகம் என்பது அதனுள் உள்ள உன்ணக்கூடிய பழமாகும். பழத்தை உண்ணும் பட்சத்தில் தோல் எந்த நிறத்தை சேர்ந்தது என்று யாரேனும் பார்ப்பது உண்டோ? அதே போல் தோல் எவ்வித நிராமாயினும் உள்ளே உள்ள பழம் ஒன்றுதானே. ஆன்மீகத்தின் அடிப்படையில் மட்டுமே எழகூடியது எதன் மீதும் ஏற்படும் பற்று. ஆன்மீகம் என்பது நம்முள் உள்ள பற்று என்ற ஆழ்ந்த உணர்வை தீவிரமாக எழ்ச்செயும் ஒரு சக்தி. இந்த சக்தியை ஒரு முறை உணர்ந்தால் போதும், அதன்பின்நர் செய்யக்கூடிய அத்தனை செயல்களிலும் அதன் தாக்கம் வெளிப்படும். செய்யும் ஒவ்வொரு செயலிலும் நமது முயற்சியின் பங்கு 100%மாக அமையும். இதனை திடமாக உணர்த்தவர்கள் நமது மன்னர்கள். மேலும் இந்த ஆன்மீக சக்தி ஒவ்வொரு நாளும் குறையாது இருக்க செய்வதே தியானம் என்ற தினப்யிற்சி. இந்த ஆன்மீக அடிப்படையில் ஏற்பட்ட பற்றினால் உண்டானதே பல தரப்பை சார்ந்த சங்கங்கங்கள். அவ்விதம் ஏற்பட்ட சங்கங்களில் தமிழ் சங்கமே முதன்மை பெற்றது. ஏனெனில் மொழி பற்றுக்கும் நாட்டு பற்றுக்கும் தெய்வப்பற்றுக்கும் எந்த வித வேறுபாடும் இல்லை. இக்காரணம் கருதியே தமிழ் அன்னையையும் தெய்வமாக வணங்கினர். தமிழண்னையை துதிப்பவநக்கும் தெய்வத்தை துதிக்கும் பக்தனுக்கும் எந்தவித வேறுபாடும் கிடையாது. தமிழ் மன்னர்கள் வளர்த்த சங்கத்தை சார்ந்தவர்கள் ஆன்மீகத்தினால் உந்தப்பட்டு பாடப்பட்டவையும் எழுதப்பட்டவையும்தான் இப்போதுள்ள களஞ்சியமாக மாறியது. மொழிபற்றை தெய்வப்பற்றுக்கு நிகராக போற்றபபட்டத்தின் காரணததால்தான் தமிழ் இன்றும் பல நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. எனவே ஆன்மீகம் என்ற உணர்வை புறக்கணிக்காது தியானம் என்ற பயிற்சியை தொழுது செயல்பட்டால் மட்டுமே நம்முள் உள்ள மொழிபற்ருக்கொ நாட்டுப்ற்ருக்கொ ஒரு உருவம் தர முடியும். நமது மன்னர்கள் கடைப்பிடித்த்தை நாமும் கடைப்பிடிப்போம், நமது மொழிக்கும் நமது நாட்டிற்கும் பெருமை சேர்ப்போம்.

No comments: