கேட்க இயலாது என்றனர், கேட்டணன் உனது செம்மொழியை!
தொட இயலாது என்றனர், கட்டி தழுவினாய் நீ என்னை!
முகர்தல் இயலாது என்றனர், முகர்ந்தேன் உனது சுகந்தத்தை!
சுவைக்க இயலாது என்றனர், அருசுவையும் சுவைக்க கிடைத்தது உனது சன்னிதானத்தில்!
கடவுளை தேடிச் செல்லும் சான்றோர்களே! கட உள் என்றபிண் அதனைக் கேட்டமர்ந்தணன் உள்ளே!
பிண்ணர் ஏன் தேடிச்செல்கிறாய் அங்கும் இங்கும்! ஓரிடத்திலமர்ந்து உன்னுள் தேடினால் கிடைக்காதவனா அவன்?
தேடும் முறையை கற்றுகொடுக்க வந்தேன் என்றனை, ஆனால் பின்னர் அறிந்தணன் தேடிய பறம்பொருளே நீயென!
வாழ்வே துயரம் என்றனர் சிலர், உன்னை அடித்தளமாக வைத்து வாழ அரியாதார்!
அன்பே சிவம் என்கின்றனர் பலர், அன்பின் உருவாகிய உன்னையே சிவன் என்றேன் நான்!
பன்னூரு நூல்கள் மூலம் தேடலை தொடர்பவர் பலர், நூல்களின் சாரம் நீயே என்றேன் நான்!
அறிய வேண்டியவை ஐம்பொருளென கூருவர் சிலர், அறியவேண்டிய கட்டளையான ஐந்தையும் தந்தவன் நீயெ என்றேன் நான்!புன்னகையை மறந்து வாழும் பலரின் மத்தியில், எல்லோரின் முகத்திலும் புன்னகை மலரச்செய்து புன்னகை மன்னனாக திகழ்பவன் நீயே என்றேன் நான்!
No comments:
Post a Comment