Wednesday, January 17, 2018

தேவரின் மொழியை போற்ற தொடங்குவோம்!

தமிழ் எனது தாய்மொழியானால் சமஸ்கிருதம் தேவரின் மொழியாகும். சமஸ்கிருதம் என்னும் மருந்தை தமிழ் என்னும் தேனோடு உண்பது பண்பு. நமது பாரதி செந்தமிழை தேனோடு ஒப்பிடுவதும் இதற்காகவேதான் என்று தோன்றுகிறது. மருந்தை நேரடியாக உண்பதற்கு மிகுந்த வைராக்கியம் தேவை. ஆனால் அதே மருந்தை இனிமையாக அருந்துவதற்காகவே தேன் சேர்க்கப்படுகிறது. அவ்வண்ணமே தேனாக அமைகிறது நமது தமிழ் மொழி சமஸ்கிருதம் என்னும் மருந்தை அருந்த. ஆனால் சமஸ்கிருத்த்தை தமிழிலிருந்து முற்றிலும் அகற்றிவிட்டால் அதில் மிஞ்சுவது வெறும் தேனின் இன்சுவை மட்டுமே. நமது தேகத்திற்கு வேன்டிய அதிஅவசியமான மருந்து நமக்கு கிட்டாது. இதனால் நஷ்டம் அடைவது தமிழ் மக்களாகிய நாமே. 
இதை அறந்தே வள்ளுவர் அவரது முதல் குரளிலேயே சமஸ்கிருதத்தை சேர்த்தார். "ஆதி" மற்றும் "பகவன்" என்னும் வார்த்தைகளை பயன்படுத்தினார். தமிழுக்கு சமஸ்கிருதம் ஒரு எதிரி என்ற வகையில் ப்ரசாரம் செய்ததன் பலன், பல தமிழர்களுக்கு திருக்குறளில் சமஸ்கிருதம் இருப்பதுக் கூட தெரியாமல் போனதுதான். வள்ளுவரே புறக்கணக்காத மொழியை நாம் ஏன் வெறுக்க வேண்டும்? வெறுத்தால் அது நமது அறியாமையையே காட்டுகிறது. சமஸ்கிருதத்தை உலக மொழிகள் அனைத்தும் ஏற்றுள்ளது பலருக்கு அதிற்ச்சி தருவதாகும். உதாரணமாக நாம் உபயோகம் செய்யும் ஆங்கில மாதங்கள் கூட சமஸ்கிருதம்தான் என்பதை எத்தனைப் பேர் அறிவர்? செப்டம்பர் என்பது "சப்த்த" "அம்பர்" ஆகும். அதன் பொருள் ஏழாம் வாணம். இதை போலவே அக்டோபர் என்பது அஷ்ட அம்பரிலிருந்தும் நவம்பர் என்பது நவ அம்பரிலிருந்தும் டிசம்பர் என்பது தச அம்பரிலிருந்தும் வந்துள்ளன. இதைக்கூட அறியாத வகையில் நம்மை அறியாமையின் ஆழத்தில் தள்ளியுள்ளது சமஸ்கிருத எதிற்பு. அத்தகைய எதிற்பை கைவிடுவதே அறிவு. பண்டைய தமிழர்களுக்கு நாம் அளிக்கும் மறியாதையும் அதுவே. தாயின் மொழியையும் தேவரின் மொழியையும் இனைத்து பயன்பெறுவதே நாம் முழுமையடைவதர்க்கு உதவுவதாகும்.